ஒருவர் மரணம் – நால்வர் கைது!

கலஹா – புபுரெஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு வலுவடைந்ததில் காயமடைந்த ஒருவர் நேற்று மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

மேலும் சம்பவத்தில் மரணமடைந்தவர் 54 வயதான நபர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தநிலையில் இது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய நால்வர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை சந்தேகநபர்களில் ஒருவர் மாரடைப்பு காரணமாக பொலிஸாரின் பாதுகாப்பின் கீழ் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*