சிங்கப்பூராக மாறும் இலங்கை

இலங்கையின் இன்றைய நிலையான அபிவிருத்தித் திட்டங்கள், எதிர்காலத்தில் நாட்டை சிங்கப்பூராக மாற்றுவதற்கு வழிவகுக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இதனை தெரிவித்துள்ளார்.
அயல் நாடுகளான இந்தியாவும் இலங்கையும் எல்லைகளால் பிரிக்கப்பட்டிருந்தாலும் உணர்வுகளையும் வரலாற்றையும் எவராலும் பிரிக்க முடியாதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரி பதவியேற்று இருவருட பூர்த்தியை முன்னிட்டு நேற்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் விசேட சொற்பொழிவாளராக கலந்துகொண்ட ஆந்திர முதல்வர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டார்.
இலங்கையில் மலேரியா முற்றாக ஒழிக்கப்பட்டமை குறித்து பாராட்டு தெரிவித்த ஆந்திர முதல்வர், வறுமையும் முற்றாக ஒழிக்கப்பட வேண்டுமென இதன்போது சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி மைத்திரி பதவியேற்ற பின்னர் நாட்டில் பல முன்னேற்றகரமான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதென்றும் அபிவிருத்தியின்போது சூழலுக்கு பாதிப்பின்றி தொழிநுட்ப அபிவிருத்திகளும் முன்னெடுக்கப்பட வேண்டுமென்றும் ஆந்திர முதல்வர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, நாட்டின் சட்டமும் ஒழுங்கும் பாதுகாக்கப்படுவது அவசியமென குறிப்பிட்ட ஆந்திர முதல்வர், குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கு வீதிகள் மற்றும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்படுவது அவசியம் என்றும் குறிப்பிட்டார்.
இதேவேளை, மாட மாளிகை இருந்தும் அதில் வாழாத ஜனாதிபதி மைத்திரியின் எளிமை குறித்து இதன்போது ஆந்திர முதல்வர் பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*