சின்னம்மாவா ? பிரேமலதா விஜயகாந்தா ?

அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலா, அரசியல் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்தை நியமிக்க வேண்டும் என சேலம் மாவட்ட தேமுதிக ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சேலம் கிழக்கு மாவட்ட தேமுதிக சார்பில் நேற்று நடந்த கூட்டத்திலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டது.
மேலும், தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியினை வரும் பொங்கல் அன்று நடத்த தமிழக அரசும், மத்திய அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேமுதிக-வின் வளர்ச்சிக்காக செயல்படும் பிரேமலதாவை கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்க வேண்டும், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்.
தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், சேலம் இரும்பாலையை தனியார் மயமாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*