கிளிநொச்சியில் உயா்தரம் கற்கும் மாணவி தீ மூட்டி தற்கொலை…!

கிளிநொச்சி கனகாம்பிகைகுளம் பகுதியில் 17 வயது மாணவி ஒருவா் இன்று 21-12-2016 அதிகாலை தீ மூட்டி தற்கொலை செய்துள்ளாா். இச் சம்பவம் இன்று அதிகாலை மூன்று முப்பதுக்கும் நான்கு மணிக்கும் இடையில் இடம்பெற்றுள்ளது உறவினா்கள் தெரிவிக்கின்றனா். தனக்குதானே தீ மூட்டியுள்ளதாகவும், சம்பவ இடத்திலேயே மாணவி உயழரழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன்போது கனகாம்பிகைகுளத்தைச் சோ்ந்த கிருஸ்ணகுமாா் வா்னுஜா வயது 17 எனும் மாணவியே இறந்துள்ளாா்.

குறித்த மாணவியின் தந்தை இறுதி யுத்த காலத்தில் இறந்துள்ள நிலையில் தாய் குறித்த உயா்தரம் கற்கும் மாணவியை யாழ்ப்பாணத்தில் படிப்பித்து வந்துள்ளாா். சம்பவ இடத்திற்குச் சென்ற கிளிநொச்சி பொலீஸாா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*