ஜெர்மன் விமான நிலையத்தில் சுமார் 300 விமானங்கள் இரத்து!

 

ஜெர்மனி முழுவதும் திங்கட்கிழமை (10) திட்டமிடப்பட்ட பரந்த வேலைநிறுத்தங்களுக்கு முன்னதாக தரைவழி ஊழியர்கள் வெளிநடப்பு செய்ததால், ஞாயிற்றுக்கிழமை (09) ஹாம்பர்க் விமான நிலையத்தில் சுமார் 300 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டன.

ஜெர்மன் தொழிற்சங்கமான வெர்டி இந்த நடவடிக்கை குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

மேலும், காலையில் 10 விமானங்கள் சேவையை மேற்கொண்ட பின்னர், விமான நிலைய ஊழியர்கள் வெளிநடப்பு செய்ததால் விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டதாக ஹாம்பர்க் விமான நிலையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையால் 144 வருகைகள் மற்றும் 139 புறப்பாடுகள் இரத்து செய்யப்பட்டன.

இதனால் 40,000 க்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டனர் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விமான நிலைய தரைப் பணி ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வெர்டி, வேலைநிறுத்தப் போராட்டம் திங்கட்கிழமை (10) தொடரும் என்று கூறியுள்ளது.

இந்த நடவடிக்கை உள்ளூர் வசந்த விடுமுறை நாட்களில் பயணம் செய்ய முயற்சிக்கும் பயணிகளுக்கான திட்டங்களை கடுமையாக சீர்குலைக்கும் என்று விமான நிலையம் தெரிவித்துள்ளது.

தொழிற்சங்கம் 8% ஊதிய உயர்வு அல்லது மாதத்திற்கு குறைந்தபட்சம் 350 யூரோக்கள் ($380) அதிகரிப்பு, அத்துடன் அதிக போனஸ் மற்றும் கூடுதல் விடுமுறை ஆகியவற்றைக் கோருகிறது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form