இந்த நேரத்தில் திருமணம் செய்யலாமா?

 

ஆன்மீகத்தில் பிரம்ம முகூர்த்த நேரம் என்பது என்ன? இந்த பிரம்ம கூர்த்த நேரத்தின் முக்கியத்துவம், பலன்கள் என்னென்ன? இந்த குறிப்பிட்ட நேரத்தில் திருமணம் செய்யலாமா? பொங்கல் வைக்கலாமா? இவைகளை சுருக்கமாக இங்கே பார்ப்போம். 

விடிகாலை நேரத்தில், காற்று மண்டலம் தூய்மையாக இருக்கும். இந்த நேரத்தில் தூய்மையான காற்றை சுவாசிப்பது, உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும். 

அறிவியல் உண்மைகள் 

அதிகாலையில் முதன்முதலாக நம்முடைய உடலில் சுரக்கும் இந்த திரவமே மூளைக்கும் இருதயத்திற்கும், மூளைக்கும் தண்டுவடத்திற்கும், மூளைக்கும் சிறுநீரகத்திற்கும் தொடர்பை ஏற்படுத்துகிறது. பிரம்ம முகூர்த்த நேரத்தில் மாணவர்கள் படித்தால், மனதில் அப்படியே பதியும். 

இந்த அதிகாலை நேரத்தைதான் அன்மீகத்தில் பிரம்ம முகூர்த்த நேரம் என்கிறார்கள் அதாவது, 3.30 முதல் 6.00 மணி வரை ஆகும். இந்த நேரத்தில்தான் தேவர்களும், பித்துருக்களும் ஒவ்வொருவரின் வீடு தேடி வருவார்களாம். தேவர்கள், தேவதைகள், திருமால், சிவபெருமான், மகாலக்ஷ்மி போன்ற தெய்வங்கள் நமக்கு வான்வெளியில் அருள்பாலிப்பதாக ஐதீகம். 

லட்சுமியின் ஆசீர்வாதம் 

அதிலும் லட்சுமிதேவி பிரம்ம முகூர்த்தத்தில் தான் வீதி வலம் வருவதாக நம்பப்படுகிறது. எந்த வீட்டில் விளக்கேற்றி வைத்திருக்கிறார்களோ, அந்த வீட்டில் நுழைந்து, அவர்களை ஆசீர்வதிப்பாள் என்பது நம்பிக்கையாக உள்ளது. 

எனவே, பெண்கள் விடிகாலையிலேயே தூங்கி எழுந்துவிட வேண்டும். காலை 4.30 லிருந்து 6 மணிக்குள் வீட்டு வாசலில் சாணம் தெளித்து, அரிசி மாவினால் கோலம் போடவேண்டும். 

குளிக்கும் நீரில் ஒரு சிட்டிகை மஞ்சளையும் சேர்த்து குளிப்பதால் விஷ்ணு பகவான், பிரஹஸ்பதியின் அருள் நீங்காமல் இருக்கும். பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளிக்காவிட்டாலும், பல் துலக்கி, முகம், கை, கால் கழுவி விட்டு பூஜை அறைக்கு சென்று விளக்கு ஏற்றலாம். 

யார் யாரெல்லாம் தவிர்க்கலாம் 

ஆனால் பெண்கள் மாதவிடாய் நேரத்தில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கு ஏற்றுவதை தவிர்க்கலாம். மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுக்கு அருகில் படுத்துள்ள நபர்களும், இல்லறத்தில் ஈடுபட்டுள்ளவர்களும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் குளிக்காமல் விளக்கை ஏற்றவே கூடாது. 

பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து விளக்கை ஏற்றி வழிபடும்போது, மனதில் நினைத்த அத்தனை வேண்டுதல்களும் உடனே நிறைவேறுமாம். அதிலும், அதிகாலை 4 மணியில் இருந்து 4.30 மணி வரை, தீபத்தை ஏற்றிவைப்பது கூடுதல் விசேஷமானது. முன்னதாக நிலைவாசலில் ஏற்றிவிட்டு, பிறகு பூஜையறையில் ஏற்றி வைக்கலாம். 

பிரம்ம முகூர்த்தத்தில் திருமணம் செய்யலாமா? 

பிரம்ம முகூர்த்த நேரத்தில் பொங்கல் வைக்கலாமா? என்று சிலருக்கு சந்தேகம் இருக்கலாம். பிரம்ம முகூர்த்த நேரத்தில் வைக்கப்படும் பொங்கலுக்கு நல்ல நேரம் பார்க்க வேண்டிய அவசியம் என்றாலும், 5.30 மணிக்குள் பொங்கல் வைத்து முடித்து விடுவது சிறப்பானது என்கிறார்கள் ஜோதிடர்கள். 

அதேபோல, பிரம்ம முகூர்த்த நேரத்தில், திருமணம், வீடு கிரகப்பிரவேசம், உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் செய்வது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. எனினும் சூரியன் உதித்த பிறகே திருமண சடங்குகளை நடத்த வேண்டுமாம். அந்தவகையில் காலை 6 மணிக்கு மேல் 12 மணிக்குள் திருமணம் செய்யலாம் என அறிவுறுத்துகிறார்கள். 

பலன்கள் என்ன? 

பிரம்ம முகூர்த்தத்தில் வழிபாடு செய்து வந்தால், முகூர்த்தத்தில் நீண்ட ஆயுள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் கூடும். மனக்குழப்பங்கள் மனோபயங்களும் விலகும். அதிலும் இந்த குறிப்பிட்ட நேரத்தில் முன்னோரை நினைத்து வழிபட்டால், அவர்கள் குளிர்ந்து போய் நம்முடைய வீட்டுக்கு வந்து, கஷ்டங்களையெல்லாம் போக்கி ஆசீர்வதிப்பார்களாம். அதனால்தான் பிரம்ம முகூர்த்தத்தில் முன்னோரை நினைத்தால் மும்மடங்கு பலன் என்பார்கள்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form