Tamil News Online - Tamil News Paper Online - Tamil News Live Online
Browsing Category

Sri Lanka

பெண்ணை அச்சுறுத்தி வானை நோக்கி சுட்ட கும்பல் குறித்து விசாரணை

காரில் சென்ற பெண்ணை அச்சுறுத்தியதோடு, ஆகாயத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட கும்பல் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, மாரவில பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 16ம் திகதி இரவு 08.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாரவில பகுதியைச் சேர்ந்த…

119 அவசர பொலிஸ் சேவை பெயரளவில்தானா உள்ளது? மக்கள் குற்றச்சாட்டு

கஞ்சா வியாபாரத்துடன் தொடர்புடைய ஒருவர் பரந்தன் சிவபுரத்தில் தினமும் இரவில் கூரிய ஆயுதத்துடன் வீதியில் அட்டகாசம் செய்வதாக இலங்கையின் அவசர பொலிஸ் சேவை இலக்கம் 119இற்கு தெரிவிக்கப்பட்ட போதும் நீண்ட நேரமாகியும் இந்த இடத்திற்கு பொலிஸார் வருகை…

தமிழ் தேசிய அரசியலுக்கு முடிவு கட்டுகின்ற தர்ம யுத்தம் ஆரம்பம் : வி.எஸ்.சிவகரன்

தமிழ்த் தேசிய அரசியலை கொழும்பிலே அடகு வைத்து ஆதாயச் சூதாடிகளாகி விட்ட இந்த தமிழ்த் தேசிய அரசியலுக்கு முடிவு கட்டுகின்ற நோக்கில் தர்ம யுத்தத்தை தாம் ஆரம்பித்துள்ளதாக ஜனநாயக தமிழரசு கட்சியின் செயலாளர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். தமிழ்த்…

இலங்கை மக்களின் நேர்மையை கண்டு வியந்து போன வெளிநாட்டு பெண்கள்

இலங்கை வாழ் மக்களுக்கு வெளிநாட்டிலிருந்து வருகை தந்த இரு பெண்கள் நன்றி தெரிவித்துள்ளனர். இலங்கைக்கு சுற்றுலா பயணிகளாக வருகை தந்த இரு பெண்கள், தமது பணப் பையை தொலைத்துள்ளனர். எனினும் இதனை கண்டெடுத்தவர் உரிய பெண்களிடம் ஒப்படைத்துள்ளார்.…

“தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு” உதயமானது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக உதயமாகியுள்ள புதிய கூட்டணிக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன்படி “தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு” என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன்…

மன்னாரில் பிள்ளையார் சிலை உடைப்பு!

மன்னார் மாவட்டத்தினில் ஏட்டிக்குப்போட்டியாக சிலைகளையும் சொரூபங்களையும் உடைப்பதில் சதிக்கும்பல் ஒன்று ஈடுபட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.அதன் புதிய தாக்குதலாக பிள்ளையார் சிலையொன்று உடைக்கப்பட்டுள்ளது. மன்னார்-யாழ் பிரதான வீதி தள்ளாடி விமான…

சிறிலங்காவில் சிறப்பு வசதிகளைக் கொண்ட முதல் சிறைச்சாலை!

5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தச் சிறைச்சாலையில், மருத்துவனை, நீச்சல் தடாகம், விளையாட்டு மைதானம், தொழிற்பயிற்சிக் கூடம், கைத்தொழில் பிரிவு, உடற்பயிற்சிக் கூடம், உணவகம், உணவுக்கூடம், விருந்தினர் அறைகள் என்பனவும்…

படையினரிடம் சரணடைந்த இவர்கள் எங்கே? – கேள்வி எழுப்புகிறார் பிரான்சிஸ் ஹரிசன்

இலங்கையில்இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம், சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து சில புகைப்படங்களை பிரித்தானிய ஊடகவியலாளர் பிரான்சிஸ் ஹரிசன் வெளியிட்டு, அவர்களுக்கு என்ன ஆனது என கேள்வியெழுப்பியுள்ளார். அத்துடன், இறுதி…

கைதிகள் உண்ணாவிரம்- தவராசா சொல்லித்தான் சம்பந்தனுக்குத் தெரிய வேண்டுமா?

அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் இருக்கின்றமை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தனுக்கு நேரில் சந்தித்து விளக்கமளிக்கவுள்ளதாக வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர்…

யாழில் வீதியில் கூடுவோருக்கு ஆப்பு; நடவடிக்கை உறுதியானது

யாழ்மாவட்டத்தில், இரவு நேரங்களில் அவசியமற்ற முறையில் அல்லது சட்டவிரோதமான முறையில் நடமாடும் இளைஞர்களை தயவு தாட்சண்யம் இன்றி கைதுசெய்யவேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையானது யாழ் மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு…